மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 மே 2022

பட்டினப் பிரவேசம் - நம்பிக்கை தந்த முதல்வர்: ஆதீனங்கள்!

பட்டினப் பிரவேசம் - நம்பிக்கை தந்த முதல்வர்: ஆதீனங்கள்!

தருமபுர பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக ஆதீனங்கள் நேற்று மாலை முதல்வரைச் சந்தித்து பேசினர்.

தருமபுர பட்டினப் பிரவேசத்துக்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் ஆதீனங்கள் பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். உயிரே போனாலும் தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன் என்று மதுரை ஆதீனம் கூறியிருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலை நானே சென்று ஆதீனத்தைப் பல்லக்கில் சுமப்பேன். மே 22ஆம் தேதி தருமபுரத்தில் சந்திப்போம் என்று கூறினார்.

அதுபோன்று பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இந்தச் சூழலில் நேற்று (மே 7) ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், சிவஞான பாலய சுவாமிகள், மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் பிரதிநிதி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சந்தித்தனர்.

அவர்களுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது தருமபுர பட்டினப் பிரவேசம் தொடர்பாக ஆதீனங்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன்பின் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், “தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் இந்த ஆண்டு சுமுகமாக நடைபெறுவதற்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும் ஆன்மிக உள்ளங்களும் எந்த வகையிலும் கவலைப்படாமல் இருப்பதற்கான ஆறுதலை நம்முடைய பாராட்டுதலுக்குரிய முதல்வர் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களில் பட்டினப் பிரவேசம் நடத்துவதில் எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமலிருக்க, மனிதநேயத்துக்குக் குந்தகம் ஏற்படாமல் இருக்க எப்படி சுமுக தீர்வு காணலாம் என்பதை ஆதீனங்களுடன் கலந்து பேசி, தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானத்துடன் கலந்து பேசி நல்ல தீர்வு காண்போம்.

இந்த ஆண்டு மரபுபடி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதற்கு முதல்வரிடமும் அறநிலையத் துறை அமைச்சரிடமும் ஆதீனங்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்தோம். இதை ஏற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் வாக்களித்துள்ளனர் .

பட்டினப் பிரவேசம் என்பது சமயம் சார்ந்த விஷயம். அதில் அரசியலைக் கலக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் பேசியது குறித்து ஆதீனங்கள் கூறுகையில், “இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சன்னிதானங்கள் சற்று அதிகப்படியாகப் பேசி விட்டனர்” என்று கூறினர்.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

ஞாயிறு 8 மே 2022