மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

ஆட்சி ஓராண்டு நிறைவு: போட்டி சட்டமன்ற திட்டத்தில் அதிமுக

ஆட்சி ஓராண்டு நிறைவு: போட்டி சட்டமன்ற திட்டத்தில் அதிமுக

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்று மே 7-ஆம் தேதி ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான திமுக இதை கொண்டாட திட்டமிட்டுள்ள வேளையில் எதிர்க்கட்சியான அதிமுக வும் வேறொரு திட்டமிட்டுள்ளது.

ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இன்று நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு அந்த நேரத்தில் இனிப்பு கொடுத்து ஆட்சியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்தி பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள். இதனடிப்படையில் இன்று கேள்வி நேரத்திற்கு பதில் பாராட்டு நேரமாக இருக்கும் என்கிறார்கள் ஆளுங்கட்சி தரப்பில்.

.

அதேநேரம் திமுகவின் ஓராண்டு ஆட்சியில் குறைபாடுகளை சட்டமன்றத்தில் எடுத்து வைக்க அதிமுகவும் தயாராகிறது. கேள்வி நேரம் பாராட்டு நேரமாக மாற்றப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று அதிமுக தரப்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, "பாராட்டு விழா நேரத்தில் கலந்துக் கொள்வதை தவிர்த்து விட்டு அந்த நேரத்தில் சட்டமன்றத்துக்கு வெளியில் போட்டி சட்டமன்றக் கூட்டம் நடத்தி... மின்வெட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி பேசுவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளை ரகசியமாக செய்து வருகிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

ரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்த உளவுத்துறை அதிகாரிகள், சட்டமன்ற பாதுகாப்பு அதிகாரிகளை அலர்ட் செய்துள்ளனர்.

அதையடுத்து இன்று சட்டமன்றத்திற்குள் வரக்கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கார்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும்" என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.

கடந்த அதிமுக ஆட்சியில் எதிர் கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் அப்போதைய அதிமுக அரசை எதிர்த்து போட்டி சட்டமன்ற கூட்டத்தை நடத்தினார். அப்போது துரைமுருகன் தான் போட்டி சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்து அதிமுக ஆட்சியை பயங்கரமாக கிண்டல் செய்தார். ஸ்டாலின் கையில் எடுத்த போட்டி சட்டமன்ற கூட்டத்தை இன்று எடப்பாடியும் கையில் எடுக்கப் போகிறார் என்ற தகவல்கள் வருகின்றன. அதிமுகவின் போட்டி சட்டமன்ற கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் காவல்துறையினர் வேகமாக செய்து வருகிறார்கள்.

-வணங்காமுடி

நித்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கைலாசாவின் புது அப்டேட்! ...

7 நிமிட வாசிப்பு

நித்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கைலாசாவின் புது அப்டேட்!

பொங்கிய அண்ணாமலை - போட்டோ போட்டு கிண்டலடித்த உதயநிதி

4 நிமிட வாசிப்பு

பொங்கிய அண்ணாமலை - போட்டோ போட்டு கிண்டலடித்த உதயநிதி

அரசுக்கு நெருக்கடி -இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை : முதல்வர்! ...

6 நிமிட வாசிப்பு

அரசுக்கு நெருக்கடி -இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை : முதல்வர்!

சனி 7 மே 2022