மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 மே 2022

உணவுத் துறையின் ஓராண்டு சாதனைகள்!

உணவுத் துறையின் ஓராண்டு சாதனைகள்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றி பெற்ற அர.சக்கரபாணி உணவுத் துறை அமைச்சரானார்.

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி உண்மையான ரேஷன் பொருள் பயனாளிகளுக்கு பொருட்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த நுகர்வோர் வழங்கல் துறையில் கணினிமயம் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை மாநில அளவில் ரேஷன் கடைகளில் 97 சதவிகிதம் பரிவர்த்தனைகள் விரல் ரேகைப் படிப்பிகள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையான பயனாளிகள் பயனடைவது ஒருபுறம் என்றால், அவர்களுக்குப் பயன் கிடைக்காமல் செய்யும்படியாக போலி ரேஷன் அட்டைகளும், முறைகேடான அட்டைகளும் புழக்கத்தில் உள்ளன.

கடந்த ஆண்டு மே 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 264 தகுதியற்ற குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் வரையிலான ஓராண்டில் புதிதாக 11 லட்சத்து 47 ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

2.09 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 உடன் 14 வகையான மளிகை பொருட்கள் ரூபாய் 9369.86 கோடியில் வழங்கப்பட்டன. மேலும் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக 1,296 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் நெய் உள்பட 21 வகையான பொருட்களும் வழங்கப்பட்டன.

இன்னும் காவிரிப் பாசனப் பகுதியிலிருந்து கிடைக்கும் அரிசி, பொது விநியோகத்துக்கு முக்கிய பங்காக இருந்து வருகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் சக்கரபாணி முடுக்கிவிட்டுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்ய இணையவழி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த முறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடமிருந்து 29.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை சிறப்புத் திட்டத்தில்’ 109 தனியார் ஆலைகள் மூலம் மாதத்துக்கு 1,08,525 மெ.டன் திறன் உள்பட மொத்தம் 583 அரவை முகவர்களைக் கொண்டு நெல் அரவைச் செய்யப்படுகிறது.

ரேஷன் அரிசியைத் தரமாக வழங்க, அனைத்து தனியார் அரவை ஆலைகளில் கறுப்பு, பழுப்பு அரிசி நீக்கும் எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைமேற் பலனாக, அரிசியின் தரமும் உயர்ந்திருக்கிறது.

மூன்றாம் பாலினத்தவர் எனப்படும் திருநங்கையர்களுக்கு ரேஷன் அட்டை போன்றவை கிடைப்பதில் சிரமம் நிலவுவதாகப் புகார்கள் இருந்து வந்தன. அந்தக் குறையைப் போக்கும் வகையில் அமைச்சர் எடுத்த நடவடிக்கையால், கடந்த மார்ச் 21ஆம் தேதி வரை, மாநிலத்தில் 2,429 திருநங்கையர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் ஆணையத்தில் இணையதளம் மூலமாக வழக்குகளைத் தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் அர.சக்கரபாணி பொறுப்புக்கு வந்த பின்னர், கடந்த மாதம் வரையிலான ஓராண்டில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இன்றியமையா பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மற்றும் திருச்சியை மையமாகக்கொண்டு 2 புதிய சிவில் சப்ளை சிஐடி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பலவகை பருவகாலப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

சுமைத் தொழிலாளர்களுக்கு 40 கி.கி. மூட்டையை ஏற்றி இறக்குவதற்கான கூலி 3.25 ரூபாயிலிருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 ஆயிரத்து 570 சுமைப்பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது அல்லவா?தொடரும் சாதனைகள்...

விளம்பர பகுதி

.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 6 மே 2022