மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு!

ஓராண்டுக்குப் பிறகு இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே 5-ம் தேதியன்று தொடங்கும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கவுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8,37,311 மாணவ மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். 28,353 தனித் தேர்வர்கள், மற்றும் 73 சிறை கைதிகளும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று தேர்வு தொடங்கப்படுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டது. இந்தச்சூழலில் மாணவர்கள் பதற்றம் இன்றி தேர்வு எழுத முன் கூட்டியே பள்ளிக்கு வரவேண்டும் என ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் பெல் அடிக்கப்படும் , அப்போது மாணவர்கள் தேர்வறைக்கு வரவேண்டும். 9.55 மணிக்கு 2ஆவது பெல் 2 முறை அடிக்கப்படும், அப்போது தேர்வறை கண்காணிப்பாளர் வினாத்தாளை பிரிக்க வேண்டும், 10 மணிக்கு மூன்றாவது 3 பெல் அடிக்கப்படும் அப்போது மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து 10 நிமிடங்கள் வினாத் தாளை மாணவர்கள் படித்துப் பார்க்கலாம்.

10.10க்கு மீண்டும் பெல் அடித்ததும் விடைத்தாள் வழங்கப்படும். 10.15 மணிக்குத் தேர்வு எழுதத் தொடங்கலாம். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். பின்னர் மதியம் 1.10 மணிக்கு பெல் அடிக்கப்படும் அப்போது, விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும். 1.15 மணிக்குத் தேர்வு நிறைவுபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்து, அனைவருக்கும் 3 அடுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, ஆறடி இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 5 மே 2022