மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

அமமுகவை கலைக்கச் சொல்லுங்கள்: சசிகலாவுக்கு அழுத்தம்!

அமமுகவை கலைக்கச் சொல்லுங்கள்: சசிகலாவுக்கு  அழுத்தம்!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை மறைமுகமாக சந்திக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பிரமுகர்கள் சசிகலாவை சந்திப்பதே இப்போது செய்திக்கான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமாக இருந்த திருப்பத்தூர் உமாதேவன்.

தினகரனுடன் உமாதேவனுக்கு ஏற்பட்ட முரண்பாடுகள் முற்றிய நிலையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறினார். இதுகுறித்து மின்னம்பலத்தில் சசிகலாVs தினகரன்: அமமுகவின் அடுத்த விக்கெட் உமாதேவன் விலகல் பின்னணி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்தப் பின்னணியில் தினகரனிடம் முரண்பட்ட திருப்பத்தூர் உமாதேவன் நேற்று மே 4ஆம் தேதி சசிகலாவை சென்னை தி நகரில் உள்ள அவர் இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது தினகரன் மீது பல்வேறு கடுமையான புகார்களை உமாதேவன் சசிகலாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "சசிகலாவை சந்தித்த உமாதேவன் கட்சியில் மூத்தவர்களை தினகரன் தொடர்ந்து அவமானப்படுத்துவது பற்றி விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

'உங்களைப் பார்த்தாலே உங்களை சந்தித்தாலே விளக்கம் கேட்பதும் நீக்கப்படுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் உங்களை (சசிகலா) எந்த நிலையில் தினகரன் வைத்திருக்கிறார்?

.

நீங்கள் பசும்பொன் வந்தபோது எனது காரில் அதிமுக கொடியை கட்டியதற்காக என் மீது கடுமையாகக் கோபப்பட்டார் தினகரன். அந்தக் கொடியை தூக்கி எறிந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று கூறுகிறார். அப்படியானால் இவர் அதிமுகவை மீட்பதாக சொல்வது எந்த அடிப்படையில் உண்மை!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து தினகரனின் நடவடிக்கையால் பலரும் வெளியேறி வேறு வேறு கட்சிகளுக்கு சென்று வருகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவும் அதிமுகவை மீட்கவும் உடனடியாக தினகரனிடம் சொல்லி அமமுகவை கலைக்க உத்தரவிடுங்கள். தினகரனை காரணம்காட்டி தான் அதிமுகவில் இன்று இருக்கும் பல நிர்வாகிகளும் நம்முடன் வருவதற்கு அச்சப்படுகிறார்கள்.

எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கலைக்கச் சொல்லி நீங்கள் தினகரனுக்கு உத்தரவிடுங்கள். அதுதான் நமக்கு நல்லது' என்று சசிகலாவிடம் அழுத்தந்திருத்தமாக கோரிக்கை வைத்துள்ளார் திருப்பத்தூர் உமாதேவன்.

அவர் சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட சசிகலா, 'நீங்கள் சொல்ற எல்லா விஷயமும் எனக்கும் தெரியும். பொறுத்திருங்கள்' என்று பதில் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்" என்கிறார்கள் இந்த சந்திப்பு பற்றி அறிந்த சசிகலா வட்டாரத்தினர்.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 5 மே 2022