மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 மே 2022

நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி: மாஃபா பாண்டியராஜன்

நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி: மாஃபா பாண்டியராஜன்

மொழி விவகாரத்தில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திதான் இணைப்பு மொழி, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைக் கருத வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்குத் தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆஸ்கர் நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் மொழி பிரச்சினையில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி எனக் கூறியுள்ளார் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி. இந்தியாவின் மூத்த மொழியான தமிழ் இணைப்பு மொழியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகளை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் நாங்கள் அதிக தமிழ் மையங்களை உருவாக்கினோம். அதுபோன்று பண்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும், தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய மையங்களை உருவாக்க வேண்டும், பன்மடங்கு அவற்றையெல்லாம் உருவாக்கினால் ஒரு காலகட்டத்தில் இணைப்பு மொழியாகத் தமிழ் வருவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

நடிகர் அஜய் தேவ்கன், இந்திதான் தேசிய மொழி என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார் என்றால் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு மட்டுமின்றி பல பேருக்குத் தெரிவதில்லை. மொழி பிரச்சினையைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த டிராக் மிகச் சரியான டிராக். அதற்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையில் இருக்கிறவர்கள் எல்லாம் நான் விட்டு வந்த பிள்ளைகள்தான். எல்லோரும் நன்றாக வேலை செய்கிறார்கள். தமிழ் வளர்ச்சித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். தமிழ், தமிழ் எனப் பேசுகிறவர்கள் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 4 மே 2022