மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

டிஜிட்டல் திண்ணை: அடுத்தடுத்த அமாவாசைகள்: அண்ணாமலை பட்டியல் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: அடுத்தடுத்த அமாவாசைகள்: அண்ணாமலை  பட்டியல் பின்னணி!

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை ஷேர் செய்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

"தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் ஏப்ரல் 30 ஆம் தேதி அமாவாசை இரவில் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 59 மாவட்டத் தலைவர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தொடர்பவர்களே. 25 மாவட்ட தலைவர்கள் வரையே மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அமாவாசைக்கே தயாராகிவிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியல் முக்கிய காரணங்களால் தாமதமாகி அடுத்த அமாவாசையான நேற்று ஏப்ரல் 30ஆம் தேதி இரவு அதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கையில் இருக்கும் போது வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதும் தனக்கு தோதான மாவட்ட தலைவர்கள் வரவேண்டுமென விரும்பினார். தமிழகத்தில் இருக்கும் மொத்தம் 60 பாஜக மாவட்ட தலைவர்களில் முன்னாள் தலைவர் தமிழிசை, பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்களின் ஆதரவாளர்கள் பரவலாக இருக்கின்றனர். இவர்களை மாற்ற விரும்பிய அண்ணாமலை கட்சிக்காக தீவிரமாகப் பணி செய்யக் கூடியவர்களின் பட்டியலை வேகவேகமாக தயாரித்தார்.

கடந்த மார்ச் மாதத்திலேயே கணிசமான மாவட்ட தலைவர்களுக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற எச்சரிக்கைக் தகவலை தனிப்பட்ட முறையில் தெரிவித்து விட்டார் அண்ணாமலை. இதனை சவாலாக எடுத்துக் கொண்ட மாவட்ட தலைவர்கள் தங்களது அபிமான சீனியர் தலைவர்களிடம் விஷயத்தைக் கொண்டு சென்று தங்கள் மாவட்டத் தலைவர் பதவி பறிபோகாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை, தான் விரும்பியபடி முழுமையாக மாவட்டத் தலைவர்களை மாற்றம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனால் தான் கடந்த அமாவாசையன்று வெளியாக வேண்டிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் தாமதமாகி இந்த அமாவாசைக்கு வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில மாவட்டத் தலைவர்களை அண்ணாமலை மாற்றி இருக்கிறார். இப்போது 25 மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். மொத்தமுள்ள 60 மாவட்ட தலைவர்களில் அண்ணாமலையால் பாதி அளவுக்குதான் மாற்ற முடிந்திருக்கிறது.

மேலும் திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சில வருடங்களுக்கு முன் வந்து பாஜகவில் சேர்ந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. வட சென்னை மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கபிலன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலைவாணி அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்தவர். இப்படி பிற கட்சிகளில் இருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கு மாவட்ட தலைவர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் வெளியிலிருந்து வரும்போதுதான் பதவி மரியாதை கிடைக்குமா என்று நீண்ட காலமாக பாஜகவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்கள் கேட்கிறார்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தால், 'இது அண்ணாமலையின் முழுமையான பட்டியல் அல்ல. தேசிய கட்சியின் மாநில நிர்வாகத்துக்கு உட்பட்ட நடைமுறை வரம்புகளுக்கு கட்டுப்பட்டு அண்ணாமலையால் இந்த அளவுதான் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்திருக்கிறது. தற்போது பதவியில் தொடரும் மாவட்ட தலைவர்கள் பலரும் தங்களுக்கு செல்வாக்கான இடங்கள் மூலம் பதவிகளை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களும் விரைவில் மாற்றப்படுவது உறுதி. இந்த அமாவாசைக்கு தப்பித்தவர்கள் அடுத்தடுத்து அமாவாசைகளில் தப்பிக்க முடியாது' என்று சொல்கிறார்கள்.

மாவட்ட தலைவர்கள் மாற்றத்திற்கே இவ்வளவு நெருக்கடியை சந்தித்துள்ள அண்ணாமலை, அடுத்து மாநில நிர்வாகிகளை மாற்றுவதற்கும் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில். ஒரு காலத்தில் அதிமுகவில் அமாவாசை என்றாலே நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது பாஜகவில் அமாவாசை அதிரடி தொடரும் என்ற நிலை இருக்கிறது" என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 1 மே 2022