மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஏப் 2022

அரசு விழாவாகக் கலைஞர் பிறந்தநாள்!

அரசு விழாவாகக் கலைஞர் பிறந்தநாள்!

கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 26) அறிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது, “தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம், கவிழ்ந்து விடமாட்டேன்.

தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும் அதிலே நான் விறகாகத்தான் வீழ்வேன், அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும், சிதறு தேங்காயாகத்தான் உடைவேன். நீங்கள் என்னை எடுத்து தின்று மகிழலாம் என்ற கலைஞரின் வரிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அவர் கலைஞர் தான் என்று புகழாரம் சூட்டினார்.

1957 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும்தான் என்று கூறி கலைஞர் போட்டியிட்டு வென்ற தொகுதிகளைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் கலைஞர் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டை ஐந்துமுறை ஆண்டவர் கலைஞர். அவர் ஆட்சியிலிருந்த காலத்தில் உருவாக்கியது தான் இன்று நம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக் கூடிய நவீன தமிழகம்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத தலைவர் கலைஞருடைய மறைவிற்குத் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. அரசு என்பது பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் அவரிடம் தான் இருந்தது.

அரசும் அரசியலும் அவரை இயக்கின. அரசையும் அரசியலையும் அவரே இயக்கினார். இத்தகைய அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கிறது.

திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகக் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின் கலை மிகு சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 26 ஏப் 2022