துணைவேந்தர்கள் நியமன மசோதா: மநீம வரவேற்பு!

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அதன்படி இன்று துணைவேந்தர்கள் நியமன மசோதா சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி இம்மசோதாவை வரவேற்றுள்ளது.
ஆளுநரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்யவேண்டும்!
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 30, 2021
மாநில சுயாட்சியை வலுவாக்கும் மஹாராஷ்டிரா சட்டத்திருத்தத்திற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு. pic.twitter.com/xv9XMHiptX
ஆளுநரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்யவேண்டும் என்று அக்கட்சி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின் பதிவை டிவிட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ள மக்கள் நீதி மய்யம், “துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கத் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது. பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் (30.12.2021) அறிக்கையை ஏற்றுச் செயல்பட்ட அரசுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளது.
-பிரியா