rகோ பேக் அமித்ஷா- புதுச்சேரியில் போராட்டம்!

politics

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று ஏப்ரல் 24ஆம் தேதி புதுச்சேரி வந்தார்.

அரவிந்தர் ஆசிரம விழாவிலும், நலத்திட்டங்கள் அளிக்கும் விழாவிலும் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு வந்த அமித்ஷா பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அமித்ஷாவை வரவேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி தலைமையில் அமித்ஷாவை எதிர்த்து, ‘திரும்பிப் போங்கள் அமித்ஷா’ என்ற முழக்கத்தோடு புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். கோப்புகளை கையெழுத்திடாமல் தாமதப்படுத்தினார். இப்போது நாங்கள் அன்று கொண்டு வந்த திட்டங்களை தூசி தட்டி எடுத்து புதிய திட்டங்கள் போல செயல்படுத்துகிறார்கள்.

புதுச்சேரியை சிறப்பு மாநில அந்தஸ்து உயர்த்துவேன் என்று நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் இன்னும் நிறைவேற்றவில்லை. புதுச்சேரியில் இந்த அரசு அமைந்து ஒரு வருடம் ஆன பிறகும் ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. புதுச்சேரியை மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுச்சேரிக்கு அமித் ஷா வருவதால் இந்த மாநிலத்திற்கு எந்த பயனும் இல்லை என்பதால்தான் இந்த போராட்டம் நடத்துகிறோம்” என்று கூறினார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *