மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஏப் 2022

ஸ்டாலின் பஸ்ஸில் பயணிக்கிறீர்களா?: கிராமசபை கூட்டத்தில் முதல்வர்!

ஸ்டாலின் பஸ்ஸில்  பயணிக்கிறீர்களா?: கிராமசபை கூட்டத்தில் முதல்வர்!

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பஞ்சாயத் ராஜ் தினமான ஏப்ரல் 24ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். எல்லோரும் நல்லாருக்கீங்களா, இந்த ஒரு வருட ஆட்சி திருப்தியாக இருந்ததா எனக் கேள்வி எழுப்பி மக்களிடம் பேசத் தொடங்கினார்.

பெண்கள் எல்லோரும் ஸ்டாலின் பஸ்ஸில் பயணிக்கிறீர்களா, இலவசமாக பயணிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், பள்ளிகளைப் பராமரிக்க மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்று அறிவித்தோம், அந்த குழுவை இங்கு அமைத்துவிட்டார்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த பெண்கள் அமைக்கப்பட்டது என்றனர்.

பின்னர் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்துக்கே எழுந்து சென்ற முதல்வர், நான் கேட்கிறேன் என்று பதில் சொல்ல வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாகக் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த கூட்டத்தில் மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.

மற்றொரு பெண்ணிடம் இங்கு குடிநீர் பிரச்சினைகள் இருக்கிறதா என குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண் ஐயா எங்கள் ஊரில் கிட்னி பெயிலியர் என யார் பார்த்தாலும் சொல்கிறார்கள், எதனால் இந்த பிரச்சினை என்று தெரியவில்லை, தண்ணீர் பிரச்சினை காரணமா என தெரியவில்லை என்றார். அவர் சொன்னதும், மருத்துவமனை வசதிகள் இங்கு இருக்கிறதா என முதல்வர் கேட்க அந்த பெண், திருவள்ளூரில் இருக்கிறது என்றார். பின்னர் அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின், கோரிக்கை வைத்த பெண்ணிடம், ‘என்ன பிரச்சினை என பார்க்கச் சொல்கிறேன்’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முதல்வரிடம் அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாம் ஆட்சிக்கு வந்த பிறகு முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். இதில், நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆளுங்கட்சியினர் தான் வந்திருக்கிறார்கள் என்று அல்ல. 95 சதவீதம் நாம் வந்திருந்தாலும் மீதமுள்ள 5 சதவீதம் எதிர்க்கட்சியினரும் வந்திருக்கிறார்கள். எனவே அனைத்து ஊராட்சிகளுக்கும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ அதனை நிறைவேற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

ஞாயிறு 24 ஏப் 2022