மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஏப் 2022

நேரு குடும்பத்துக்கு வெளியே செயல் தலைவர்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

நேரு குடும்பத்துக்கு வெளியே செயல் தலைவர்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களில் சோனியாவுடன் தொடர் சந்திப்புக்களை நடத்திய பிரசாந்த் கிஷோர், சில நாட்களுக்கு முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பிரசாந்த் கிஷோர் சில முக்கியமான ஆலோசனைகளை அளித்துள்ளதாக டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு அதன் அடிமட்ட கிராம காங்கிரஸ் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் நேரு குடும்பத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாகவும் அதேநரம் கட்சிக்குள் சிலரால் பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது.

இதை சமாளிக்க சோனியா காந்தி கட்சியின் தலைவராக தொடர்ந்து இருந்தாலும், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை அகில இந்திய அளவில் செயல் தலைவராக நியமிக்க வேண்டும். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவை கவனிக்க வேண்டும். அதாவது நாடாளுமன்ற கட்சித் தலைவராக ராகுல் இருக்க வேண்டும். இதன் பொருள் பிரதமர் வேட்பாளராக

ராகுல் அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

மேலும் பிரியங்கா காந்தி செயல் தலைவருக்கும் தலைவருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் அளித்துள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையை பொறுத்தவரை நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பதும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி இருப்பதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இதன் நம்பகத்தன்மை கடினமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

காங்கிரஸ் கட்சிக்குள் தலைமையை எதிர்த்து குலாம் நபி ஆசாத், கபில்சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் பிரசாந்த் கிஷோரின் இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 22 ஏப் 2022