மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

கொரோனா -எச்சரிக்கை தேவை: சுகாதாரத் துறை செயலாளர்!

கொரோனா -எச்சரிக்கை தேவை: சுகாதாரத் துறை செயலாளர்!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று (ஏப்ரல் 19) கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், டெல்லியில் ஏப்ரல் 4ஆம் தேதி நிலவரப்படி 82 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 632 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகப் பரவியுள்ளது. அதுபோன்று சர்வதேச அளவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் ஏப்ரல் 18ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 7.45 லட்சமாக உள்ளது.

கொரோனா பரவலில் தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் சில நாட்களாகப் பாதிப்பு எண்ணிக்கை 25 - 30 அல்லது அதற்கும் அதிகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக எட்டு மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

எனவே வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

1.37 கோடி மக்கள் இரண்டாம் தடுப்பூசி குறித்த காலத்திற்குள் செலுத்தாத நிலையில் அவர்களுடைய தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும், முதியவர்கள் மற்றும் இணை நோய்ப் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும்.

அதுபோன்று தேவையான நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை உடனுக்குடன் எடுத்து நோய்ப் பாதிப்பு கண்டறிதல், மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் வைத்தல், உருமாறும் ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தைக் கண்டறிய அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திடல், பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நோய் பரவல் குறைந்துள்ளது என்றாலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றுவது குறைந்து விட்டது. எனவே முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகழுவுதல் உள்ளிட்ட பழக்கங்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் 93 சதவிகிதம் ba2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் , எக்ஸ்இ வகை வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 20 ஏப் 2022