மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்த சூழலில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் வைரஸ் தொற்று பரவல் தினசரி 1000 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. எனினும் சமீப நாட்களாக ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தொற்றுப் பரவுவதைக் கண்காணிக்கவும், மரபணு வரிசை முறையைத் தீவிரப்படுத்தவும், கடுமையான சுவாச நோய் மற்றும் மருத்துவமனைகளில் காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கவும், தொற்று நோய் நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகிய விதிமுறைகளைக் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கட்டாயமாக மாஸ்க்கை பயன்படுத்தப் பொதுமக்களுக்கு வலியுறுத்த வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும், திருவள்ளூர் மற்றும் வேலூரில் தலா 2 பேருக்கும், கோவை, காஞ்சிபுரம், தஞ்சை மற்றும் திருப்பூரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 20 ஏப் 2022