மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஏப் 2022

அமைச்சரிடம் சீதனம் கேட்ட எம்.எல்.ஏ!

அமைச்சரிடம் சீதனம் கேட்ட எம்.எல்.ஏ!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அவையில் பல சுவாரசியமான சம்பவங்களும், காரசார விவாதங்களும் நடைபெறுகின்றன.

சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 13) கால்நடை பராமரிப்பு, வேளாண் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதனிடையே கேள்வி நேரத்தின் போது திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் எழுப்பிய கேள்வி அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், “அமைச்சர் ஆர். காந்தியின் புகுந்தவீடு ராணிப்பேட்டையாக இருந்தாலும் திருத்தணி சட்டமன்றத் தொகுதி தான் அவருக்குத் தாய் வீடு. அவர் புகுந்த வீடான ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஏராளமான சீதனங்களைக் கொடுத்திருப்பார். ஆனால் தாய் வீட்டுச் சீதனமாக, எதையும் இந்த தொகுதிக்குக் கொடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி அவர் திருத்தணி தொகுதிக்குத் தாய் வீடு சீதனமாக ஜவுளி பூங்காவை அளிப்பார் எனத் தொகுதி மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். அவரது பேச்சு சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினரின் பேச்சைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர் காந்தி, இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை செய்து கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று பதிலளித்தார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 13 ஏப் 2022