மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஏப் 2022

அது நடக்கவே நடக்காது: பாஜகவுக்கு முதல்வர் எச்சரிக்கை!

அது நடக்கவே நடக்காது: பாஜகவுக்கு முதல்வர் எச்சரிக்கை!

மக்கள் பிரச்சினையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், "மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்கள் இன்றைக்கு பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அதனைக் கட்டுப்படுத்த கூடிய முயற்சியில் மத்திய அரசிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும். மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி பெறுவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 12 ஏப் 2022