மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

பிரதமருக்கு முதல்வர் 24 மணிநேர கெடு!

பிரதமருக்கு முதல்வர் 24 மணிநேர கெடு!

சில தினங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைமையிலான அம்மாநில அரசு ஆளுநருக்கு எவ்வித ஒத்துழைப்பையும் அளிக்கவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 11ஆம் தேதி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகெய்ட்டும் தெலங்கானா முதல்வரோடு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ஒன்றிய அரசு விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்வதில் பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டி தெலுங்கானா விவசாயிகளுக்கு நீதி கேட்டு இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தெலுங்கானா அரசு ஈடுபட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள தெலுங்கானா பவனில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்படும் 15 லட்சம் டன் நெல் முழுவதையும் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) பஞ்சாப் மாநிலத்தைப் போல கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தெலங்கானா அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை.

இதன் அடிப்படையில்தான் இந்த போராட்டம்.

இந்த தர்ணா போராட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,

"தெலுங்கானா விவசாயிகளுக்காக நாங்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கிறோம். தெலுங்கானாவில் நெற்பயிர் அபரிமிதமாக உற்பத்தியாகிறது. அவற்றைக் கொள்முதல் செய்வது குறித்த கோரிக்கைக்காக எங்களது அமைச்சர்கள் ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தபோது, அவரது பேச்சு தொனியே ஏளனமாகவும் அவமதிக்கும் வகையிலும் இருந்தது. பியூஸ் கோயலுக்கு எங்கள் அமைச்சர்களை அவமரியாதை செய்யும் தைரியம் எங்கிருந்து வந்தது? எல்லோரும் எப்போதும் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

தெலுங்கானா விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாங்கள் டெல்லி வந்து இருக்கிறோம். இனி மீண்டும் மீண்டும் டெல்லி வருவோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் டெல்லி வருவோம்.

பிரதமர் மோடிக்கும் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கும் 24 மணி நேரம் கெடு விதிக்கிறேன். அதற்குள் தெலுங்கானா விவசாயிகளின் பிரச்சினைக்கு முடிவு கட்டுங்கள். இல்லையென்றால் இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்"என்று பேசியிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 11 ஏப் 2022