மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

பெண்களுக்கு மாதம் ரூ.1000 எப்போது?: துரைமுருகன்

பெண்களுக்கு மாதம்  ரூ.1000 எப்போது?: துரைமுருகன்

தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஆறு மாதங்களுக்குள் வழங்க முயற்சிகள் நடந்து வருவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் மாதம்தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு பொய் வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்களை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் வேலூர், காட்பாடி அருகே பாலேகுப்பம் கிராமத்தில் ரூ.13.80 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒரு குடும்பத்துக்குச் செலவுக்கு 1000 கொடுக்கிறேன் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு மாத காலத்துக்குள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். அதன் பிறகு மனைவிகள் கணவர்களிடம் பணம் கேட்கத் தேவையில்லை” என்றார்.

இவ்விழாவில் தொடர்ந்து பேசிய அவர், “டீக்கடை வைத்திருந்த மோடி இன்று பிரதமர் ஆகியிருக்கிறார். முரசொலி மாறனுக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தவர் புதுச்சேரி முதல்வராக இருந்த ஜானகிராமன். எனவே, யார் எந்த வேலை செய்தால் என்ன... உழைப்பின் மூலமாக யாரும் முன்னேறலாம்” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 11 ஏப் 2022