மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஏப் 2022

ஸ்டாலின் ஒருநாள் கேரளா பயணம்!

ஸ்டாலின் ஒருநாள் கேரளா பயணம்!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று ஏப்ரல் 9ஆம் தேதி ஒரு நாள் பயணமாக கேரளா சென்று வருகிறார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கேரள மாநிலம் கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று ஒன்பதாம் தேதி கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கேரள அறநிலையத்துறை அமைச்சர் தோழர் கே.ராதாகிருஷ்ணன் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கருத்தரங்கிற்கு வருவது சந்தேகம்தான், தனது பிரதிநிதி யாரையாவது அனுப்பி வைப்பார் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் நினைத்திருந்தனர். தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூட ஸ்டாலின் கேரளா வருவார் என்று உறுதியாக தனது கேரள சகாக்களிடம் நம்பிக்கையாக கூறவில்லை. ஆனால் தோழர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் மாநாட்டில் கலந்து கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்து அனுப்பினார்.

அதன் படி இன்று ஏப்ரல் 9 காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் கேரளா மாநிலம் கண்ணூருக்கு தனி விமானத்தில் பயணம் செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு இரவு சென்னை திரும்புகிறார்.

"தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் தேசிய அளவிலான பாஜகவுக்கு மாற்றாக ஓர் அணி அமைப்பதில் உறுதியாக உள்ளார்.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சீதாராம் எச்சூரி, டி ராஜா உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

இதேபோல கிடைக்கும் சந்தர்ப்பங்களை தேசிய அளவில் பாஜக வுக்கு மாற்றாக ஒற்றை அணியாக அமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்டாலின். அந்த அடிப்படையில்தான் ஒருமித்த கட்சிகள் அழைப்பு விடுக்கும் போது இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் சென்று பங்கேற்பது என்று முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்" என்கிறார்கள் திமுக முன்னணியினர்.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 9 ஏப் 2022