கண்காட்சி முடியும் தறுவாயில் திறந்துவைத்தது ஏன்? முதல்வர்

politics

துபாயில் கண்காட்சி முடியும் தறுவாயில் முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று தமிழக அரங்கைத் திறந்து வைத்தது வேடிக்கையானது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110 இன் கீழ் உரையாற்றினார்.

அப்போது, தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக விளக்கமளித்த அவர், “கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ.68,375 கோடி முதலீட்டையும் 2 ,05,802 பேருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்று பட்டியலிட்டார்.

சென்னை, செங்கல்பட்டு என மொத்தம் 25 மாவட்டங்களில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், 192 நாடுகள் பங்கேற்ற துபாய் சர்வதேச கண்காட்சியில் மார்ச் 25ஆம் தேதி தமிழக அரங்கத்தைத் தொடங்கி வைத்தேன். மார்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது.

கண்காட்சியின் இறுதி வாரங்களில் தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள், அதனால் துபாய் சென்று மார்ச் 25ஆம் தேதி திறந்து வைத்தேன். அங்குள்ள நமது தமிழ் சொந்தங்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

நான் துபாய்க்கு சென்றது முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும்தான். அந்த இலக்கை எட்டும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *