மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஏப் 2022

மாற்றப்பட்ட நிதியமைச்சர்: மக்கள் முற்றுகையில் ராஜபக்சே

மாற்றப்பட்ட நிதியமைச்சர்: மக்கள் முற்றுகையில் ராஜபக்சே

இலங்கையின் பொருளாதார நெருக்கடி கடும் உச்சத்தை அடைந்துள்ள நிலையில்... அரசாங்கத்தின் எந்த விதமான தடைகளையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டத்தில் இறங்கி வருகிறார்கள்.

மார்ச் 31 ஆம் தேதி அன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில் அதை அடிப்படைவாதிகளின் செயல் என அரசுத் தரப்பு விமர்சித்தது.

ஆனால் அமைச்சர்கள் எம்பிக்கள் என ஒவ்வொருவர் வீட்டையும் இலங்கை மக்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி இலங்கையின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவின் வீட்டை பொதுமக்கள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

தெற்கு இலங்கையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் தங்கலே பகுதியில் அமைந்திருக்கிறது மகிந்த ராஜபக்சேவின் ஆடம்பர பங்களா.

இன்று காலை பொதுமக்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜபக்சேவின் வீட்டை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட்டனர். பிரதமர் வீட்டு வாசலில் ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த போதும் பொதுமக்கள் எந்த பயமும் இல்லாமல் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

போராடிய மக்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எந்திரங்களும் கொண்டு போலீசார் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். ஆனபோதும் மக்கள் தடைகளை உடைத்து தள்ளி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே போராட்டங்களின் அழுத்தத்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததாலும் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் நேற்று இரவு ராஜினாமா செய்தனர். அவற்றை ஏற்றுக்கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே, இன்று புதிய நான்கு அமைச்சர்களை நியமித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்கேட்டுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்படும் நிதி அமைச்சராக பணியாற்றிய மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவுக்கு பதிலாக, நீதி அமைச்சராக பணியாற்றிய அலி சப்ரி புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அனைத்து கட்சிகளும் சேர்ந்து தேசிய அரசை அமைக்க நாம் என்ற கோத்தபய ராஜபக்சேவின்

வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா

நிராகரித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா, "இலங்கைக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்து காப்பாற்ற வேண்டும்" என்று நமது இந்திய பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேந்தன்

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

திங்கள் 4 ஏப் 2022