மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஏப் 2022

முழுமையாக மீண்டுவிட்டேன்: சீமான்

முழுமையாக மீண்டுவிட்டேன்:  சீமான்

சென்னை அருகே திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர்ப் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளை இடிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே நேற்று முன்தினம் (ஏப்ரல் 2) அந்தப் பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடிய நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

தற்போது தனது உடல்நலம் குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “பணிச்சுமை, அலைச்சல், உணவருந்தாமை ஆகியவற்றாலும், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினாலும் திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின் இடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எனக்குச் சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில், அச்சோர்விலிருந்தும், மயக்க நிலையிலிருந்தும் முழுமையாக விடுபட்டுவிட்டாலும், என் மீது பேரன்பும், பெரும் அக்கறையும், பெருத்த நம்பிக்கையும் கொண்ட உலகம் முழுவதும் வாழும் என்னுயிர் தமிழ்ச்சொந்தங்கள், என்னுடைய உடன்பிறந்தார்கள், எனது உயிர்க்கினிய எனது தம்பி, தங்கைகள், பாசத்திற்குரியப் பெற்றோர்கள் என யாவரும் பெரும் கவலையடைந்து, பதற்றம் அடைந்ததையும், மனம் வருந்தித் துயருற்றதையும் நன்றாக அறிவேன். தற்போது முழுமையாக மீண்டு வந்து, முழு உடல்நலத்தையும் பெற்று வந்துவிட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப் பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களிலும், கருத்துப் பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எனது உடல்நலம் குறித்து அக்கறையோடு நலம் விசாரித்த தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்களுக்கும், பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாசுக்கும், பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஐயா ஜி.கே.வாசனுக்கும், மதுரை ஆதீனம் அவர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 4 ஏப் 2022