மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

சாத்தான்குளம் சம்பவம் இனி நடக்கக் கூடாது: டிஜிபி அறிவுரை!

சாத்தான்குளம் சம்பவம் இனி நடக்கக் கூடாது: டிஜிபி அறிவுரை!

சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 2) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வரும்போது போலீஸார் கனிவுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். வரவேற்பு பிரிவில் உள்ள போலீஸாரே புகார் அளிக்கும் பொது மக்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தலாம்.

பொதுமக்களுக்கு போலீஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் போலீஸார் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது. சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில் போலீஸார் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். நாமக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. காவல் நிலையத்துக்கு வந்தால் தங்களது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பி வரும் மக்களுக்கு, நீதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேசமயம் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பணத்தை இழக்கும் பொதுமக்கள் 1930 என்ற எண்ணுக்கு 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவித்தால், பணம் மோசடி கும்பலுக்குச் சென்றடையாமல் மீட்க முடியும். அதனால், இது தொடர்பாக போலீஸார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தின்படி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் கடந்த 28ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை 3187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.77 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும், 102 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

- வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 3 ஏப் 2022