மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

2 லட்சம் வேலைவாய்ப்புகள்: அரசின் முதலீடுகள்!

2 லட்சம் வேலைவாய்ப்புகள்: அரசின் முதலீடுகள்!

திமுக அரசு பொறுப்பேற்ற இந்த பத்து மாதங்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பான புள்ளிவிவரங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்குத் துணைநிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள்தான் திராவிடன் மாடல் என்று தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 2021 ஜூலை 7ஆம் தேதி 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 17 ஆயிரத்து 146 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கையெழுத்தானது.

அதுபோன்று 2021 செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.2000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

2021செப்டம்பர் 22 அன்று 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1880 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன்மூலம் 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

2021 நவம்பர் 23ஆம் தேதி 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 35, 208 கோடி ரூபாய் முதலீட்டில் 76, 795 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 4,488 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் 15103 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து 15 .3 .2022 அன்று சாம்சங் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1,558 கோடி ரூபாய் முதலீடுகள் வாயிலாக 600 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 26.3.2022 மற்றும் 28.3.2022 ஆகிய தேதிகளில் துபாயில் தமிழக முதல்வர் தலைமையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6100 கோடி ரூபாய் முதலீட்டில் 14,700 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

அதன்படி, திமுக அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றதிலிருந்து மொத்தம் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.68,375.54 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 2,05,402 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளிவிவரங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டை மாற்றி மாநில வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் துணைநிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள்தான் திராவிடன் மாடல். நமது அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் நமது வளர்ச்சிக்கான அடித்தளம் என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 3 ஏப் 2022