மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

1-5 வகுப்புகளுக்கு இறுதி தேர்வு உண்டா?இல்லையா? : அமைச்சர் விளக்கம்!

1-5 வகுப்புகளுக்கு இறுதி தேர்வு உண்டா?இல்லையா? : அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என்ற செய்தி பரவியது. இச்செய்தியை நாம் உள்பட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்ற தகவல் உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 3) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஏற்கனவே நான் சொன்னதுபோல திட்டமிட்டப்படி, அனைத்து மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடைபெறும். அதுபோன்றுதான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் நிச்சயமாக இறுதி தேர்வு நடைபெறும். இதுகுறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேர்வுகள் யாருக்கும் ரத்து செய்யப்படாது. தேர்வு நடைபெறாது என்று வெளிவந்த செய்தி தவறானது. 1 முதல் 8ஆம் வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்கவேண்டும் என்பது இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி விதியாக உள்ளது. அதனால், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கட்டாயம் நடைபெறும். அதுபோன்று, இந்தாண்டும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

ஞாயிறு 3 ஏப் 2022