மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஏப் 2022

பேருந்துகளில் இரவில் காவலர் பயணிக்கும் திட்டம்: சங்கர் ஜிவால்

பேருந்துகளில் இரவில் காவலர் பயணிக்கும் திட்டம்: சங்கர் ஜிவால்

பெண்கள் பாதுகாப்பிற்காக புறநகர் ரயில்களில் காவலர்கள் பயணிப்பது போல, சென்னை மாநகர பேருந்திலும் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை நேற்று(ஏப்ரல் 1) சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,” சென்னையில் குற்றச் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. ஆனால், அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு குற்றச் செயல்கள் 25% குறைந்துள்ளது. அதுபோன்று போதைப் பொருள் பழக்கத்தையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஜிபி உத்தரவின்பேரில் ஆப்ரேசன் கஞ்சா 2.0. திட்டத்தின் மூலம் அதிகளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கஞ்சா பயன்படுத்துவோர், விற்பவர்களை மட்டும் கைது செய்யவில்லை. இவர்களுக்கு எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது, யார் சப்ளை செய்கிறார் என்று கண்டுபிடித்து அவர்களையும் கைது செய்து வருகிறோம். சமீபத்தில் ஆந்திரா நெல்லூரில் ஒருவரை கைது செய்தோம். இந்த பிரச்சனையின் வேர்வரை செல்கிறோம். பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில் மற்றும் வழிதடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் காவலர்கள் தொடர்ந்து ரோந்து பயணம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து 240 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களும் சில நேரங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பாக புகார் வந்துள்ளது. அதனால், தேவைப்படும் பட்சத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக புறநகர் ரயில்களில் காவலர்கள் பயணிப்பது போல, சென்னை மாநகர பேருந்திலும் இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறினார்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து பேசிய அவர், “சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.1.17 கோடி மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை பழுதுநீக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ரூ.130 கோடி நிர்பயா திட்டத்தின் மூலம் பெறப்பட்டு புதிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

சனி 2 ஏப் 2022