மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஏப் 2022

இலங்கையில் எமர்ஜென்ஸி

இலங்கையில் எமர்ஜென்ஸி

இலங்கையில் அவசரநிலைப் பிரகடனத்தை பிறப்பித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, சில வாரங்களாக மிக அதிகப்படியான விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் பற்றாக்குறை, பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை என கடுமையான பொருளாதாரச் சுழலில் சிக்கியிருக்கிறது.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக அவரது தம்பி மஹிந்த ராஜபக்சேவும், அமைச்சர்களாக அவர்களது குடும்பத்தினர் சிலரும் இருந்து வருகின்றனர். இலங்கை நாட்டின் அதிகாரம் ராஜபக்சே குடும்பத்திடம் தான் இருக்கிறது.

இவர்களின் தவறான பொருளாதார அணுகுமுறைகளால் இந்தியா உட்பட சில நாடுகள் உதவி செய்தபோதும் இலங்கையால் பொருளாதாரரீதியாக ஒரு நிலையை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடுமையான வெளிநாட்டு கரன்சி பற்றாக்குறை, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை செலுத்த முடியாமை ஆகியவற்றால் இலங்கைக்கான இறக்குமதி தடை பட்டுள்ளது. அதனால் மக்கள் அன்றாடம் உணவுப் பொருள் வாங்குவதற்குக் கூட கஷ்டப்படுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை கண்டித்து எதிர்க்கட்சிகள் மட்டுமே போராடி வந்த நிலையில் இலங்கை முழுவதும் சாதாரண பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். பல்வேறு நகரங்களிலும் சிற்றூர்களிலும் இந்த போராட்டம் பரவியது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. உச்சகட்டமாக மார்ச்சு 31ஆம் தேதி இரவு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் வன்முறை வெடித்தது. இதில் போலீசாரும் ஊடகவியலாளர்களும் காயமடைந்ததாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. மேலும் இலங்கையில் அரபு வசந்தத்தை ஏற்படுத்த போவதாக போராட்டக்காரர்கள் கோஷமிட்டார்கள் என்றும் இது மக்கள் நடத்திய போராட்டம் இல்லை அடிப்படைவாதிகள் நடத்தியது என இலங்கை அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து தங்களது ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்றும், புதிய காபந்து அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில் நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டார் அதிபர் கோத்தபய ராஜபச்சே.

அவசரநிலை உத்தரவின் மூலம் எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்க அதிபர் திட்டமிட்டுள்ளார். இலங்கை நாட்டின் அவசரநிலை உத்தரவுப்படி, யாரையும் எந்த ஆதாரமும் இல்லாமல் ராணுவம் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும். மேலும், ராணுவம் நினைத்தால் யாருடைய சொத்துக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்த நிலையில் இலங்கை அரசின் அவசர நிலை பிரகடனத்தை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

வேந்தன்

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

சனி 2 ஏப் 2022