மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

10.5% இட ஒதுக்கீடு ரத்து: நாளை பாமக அவசர செயற்குழுக் கூட்டம்!

10.5% இட ஒதுக்கீடு ரத்து: நாளை பாமக அவசர செயற்குழுக் கூட்டம்!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்று நேற்று (மார்ச் 31) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது பாமகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், 10.5% இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில், 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து குறித்து விவாதிக்க பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறுகிறது என்று பாமகவின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை (ஏப்ரல் 2) சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும்.

இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், அதனடிப்படையிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவசர செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 1 ஏப் 2022