மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

கண்ணப்பன் மீது வன்கொடுமை வழக்கு: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

கண்ணப்பன் மீது வன்கொடுமை வழக்கு: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

அரசு வட்டார வளர்ச்சி அலுவலரை அவமதித்த விவகாரத்தில் அமைச்சர் கண்ணப்பன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. மாநாடு இன்று மாலை 5 30 க்கு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தற்போது அந்த பதவியில் இருக்கும் கே. பாலகிருஷ்ணன் மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநாடு முடிந்த பிறகு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் கே. பாலகிருஷ்ணன். அப்போது அவர்,

"தமிழ்நாட்டில் பிஜேபி எங்கெல்லாம் சென்று பணியாற்றுகின்றதோ அங்கெல்லாம் சென்று அவர்களை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி பாத்திரத்தை வகிக்கும்.

கோயில்களை பாஜக தனது அரசியலுக்காக பயன்படுத்துவதை முறியடிக்க மாநிலக் குழு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கும்.

பிஜேபியை அரசியல், கலாச்சாரம், பண்பாடு ஆகிய எல்லாத் தளத்திலும் முறியடிக்கக் கூடிய போராட்டங்களை முன்னெடுப்போம். பாஜகவை எதிர்ப்பதற்கு திமுக எங்களுக்கு முக்கியமான நண்பர். திமுக உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய கே. பாலகிருஷ்ணன்,

"இன்னும் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. எங்களுக்கெல்லாம் வருத்தம் என்னவென்றால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் ஒரு பிடிஓ அதிகாரியை பார்த்து, ' நீ எஸ்.சி. பிடிஓ' என்று பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு அந்த அமைச்சரின் துறையை மாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இது துறை மாற்றுவதால் மட்டும் தீருகிற பிரச்சனை அல்ல.

இது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வருகிற குற்றமாகக் கருத வேண்டும் என முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சரே இப்படிப் பேசுகிற ஒரு பண்பாடு இருந்தால் மற்றவர்கள் எப்படி பட்டியல் இன மக்களை பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. எனவே முதலமைச்சர் சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியான பிரச்சினைகளின் மீது நடவடிக்கை எடுக்க வலிமையான போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுப்போம்.

அமைச்சராக இருக்கிறார், எங்கள் தோழமை கட்சியாக இருக்கிறார் என்பதற்காக நாங்கள் இதை எப்படி விட முடியும்? அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைச்சர் பேசியது தவறு என்பதை துறையை மாற்றியதன் மூலம் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

வேந்தன்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 1 ஏப் 2022