மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் வைத்த கோரிக்கை!

நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் வைத்த கோரிக்கை!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 1) டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

தொடர்ந்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து தமிழகத்துக்கான கோரிக்கைகளை அவர்களிடம் எடுத்து வைப்பேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் , டெல்லியில் உள்ள நிதியமைச்சர் அலுவலகத்துக்குச் சென்று நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, 2021-22ஆம் ஆண்டுக்கான தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிதியை விடுவிக்க வேண்டும்.

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 13,504.74 கோடி உட்பட 20,869 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2022 ஜூன் மாதத்திற்கு பிறகும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைத் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். அதுபோன்று 2022- 23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு ஏறத்தாழ ரூ.20,000 கோடி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது பொருநை நாகரீகம் குறித்த புத்தகத்தையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் வழங்கினார்.

நிதியமைச்சர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். பின்னர் டெல்லி அரசுப் பள்ளியையும் பார்வையிட்டு அதன் நிர்வாக முறைகளைக் கேட்டறிந்தார். டெல்லி அரசால் நடத்தப்படும் முஹல்லா கிளினிக்கையும் பார்வையிட்டார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வெள்ளி 1 ஏப் 2022