மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

தனி ஒருவராக கே.பி.முனுசாமி போராட்டம்: ஏன்?

தனி ஒருவராக கே.பி.முனுசாமி போராட்டம்: ஏன்?

கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்எல்ஏவுமான கே.பி. முனுசாமி தனி ஒருவராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க அரசு  விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 5000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

கையப்படுத்தப்படும் நிலத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மாந்தோப்புகள் 30க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள், மட்டுமின்றி 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு குறு விவசாயம் நடைபெற்று வருகிறது என இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

5ஆவது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளனர். அதோடு ஏற்கனவே இருக்கும் 3ஆவது, 4ஆவது சிப்காட் வளாகத்தில் காலியாக இருக்கும் இடத்தில் இந்த சிப்காட்டை அமைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தசூழலில் இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் கே.பி.முனுசாமி ஆலோசித்தார். தொடர்ந்து போராட்டத்துக்கு காவல்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், தொழிற்பேட்டைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி கே.பி.முனுசாமி இன்று காலை முதல் தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சூளகிரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு பின்புறம் உள்ள பேனரில் "5,000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே பறிக்காதே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கே.பி.முனுசாமியின் போராட்டத்தால் அந்த பகுதியில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். அதுபோன்று முதலில் கே.பி.முனுசாமி மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு குவிந்த அதிமுக நிர்வாகிகள் அவருடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 1 ஏப் 2022