மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

நீட்: குடியரசுத் தலைவர் வேலையை ஆளுநர் பார்க்கிறாரா? திமுக எதிர்ப்பு!

நீட்: குடியரசுத் தலைவர் வேலையை ஆளுநர் பார்க்கிறாரா? திமுக எதிர்ப்பு!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று மார்ச் 31-ஆம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை மனுவாக கொடுத்திருக்கிறார்.

அதில் நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானதாக உள்ளது.

இதற்கிடையே வரும் ஜூலை மாதம் அடுத்த நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா இன்னமும் டெல்லிக்கு அனுப்பப்படவில்லை.

கடந்த 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரிடம் இருந்து இந்த மசோதா பற்றி எந்த தகவலும் வராத நிலையில் நவம்பர் 27ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து இது குறித்து நேரடியாக வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார்.

இது பலத்த அரசியல் சாசன சர்ச்சையை உருவாக்கிய நிலையில், பிப்ரவரி எட்டாம் தேதி மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றம் கூடி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி கேட்ட கேள்விக்கு, 'நீட் விலக்கு மசோதா இன்னும் ஆளுநரிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை" என ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 1) முதல்வர் டெல்லியில் இருக்கும் நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியின் தலையங்கத்தில் ஆளுநரை மீண்டும் விமர்சித்து எழுதப்பட்டுள்ளது.

"இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கருத்தை ஆளுனர் கேட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. ஆளுநர் யார் கருத்தையும் கேட்பது பற்றி ஆட்சேபணை இல்லை. அவர் எப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்பது தான் ஒரே கேள்வி.

ஒருமுறை திருப்பி அனுப்பிய சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் மறுமுறை திருப்பி அனுப்ப முடியாது என்பதை ஆளுநர் அறிவார். எனவே அவருக்கு மாற்றுப் பாதை இல்லை. குடியரசுத் தலைவருக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட முன்வடிவு சரியானதா இல்லையா என்று அட்டர்னி ஜெனரலை வைத்து குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்தி கொள்வார். குடியரசுத் தலைவரின் பணியை ஆளுநர் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

ஆளுனர் நடந்துகொள்ளும் முறை என்பது இன்றைய கேபினட் சிஸ்டத்திற்கே எதிரானது. 1920 ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த இரட்டை ஆட்சி முறை அமலில் இருப்பது போல ஆளுநர்கள் செயல்பட முடியாது" என்று திமுக தலையங்கத்தில் ஆளுநரை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளது.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 1 ஏப் 2022