மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

பொய் பேசுவதில் வல்லவர்கள்: அண்ணாமலை

பொய் பேசுவதில் வல்லவர்கள்: அண்ணாமலை

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் கமலாலயத்தில் நேற்று (மார்ச் 30) செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “திமுகவைப் பொறுத்தவரை, இப்போது பொய் சொல்லுவதிலே அவர்கள் வல்லவராகிவிட்டனர். அரசியலிலே கருத்தியல் ரீதியாக எங்களுடன் மோத முடியாமல், குறிப்பாக, சட்டசபைக்கு உள்ளே எங்களது சட்டசபைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வைக்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், எங்களுடைய எம்.எல்.ஏக்களின் உழைப்புக்கு பதில் சொல்ல முடியாமல், பாஜக தொண்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், இப்போது பொய்யைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமும் ஒரு கட்டுக்கதை. அதற்கு பதில் கூறினால், அடுத்து ஒரு கட்டுக்கதை, அதற்கு பதில் கூறினால், அடுத்து ஒரு கட்டுக்கதை. அதனால் எத்தனை முறை அதற்கு பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. திமுகவின் அமைப்பு பொதுச்செயலாளர் நேற்று முன்தினம் டெல்லியில் பேசும்போது, இந்த மாதிரி அண்ணாமலை அவர்கள் காவல் துறை அதிகாரியாக இருக்கும்போது, சித்தராமையாவின் ஆட்சியைக் கலைத்தார் என்று கூறுகிறார்.

நமக்குத் தெரியும், சித்தராமையா ஐந்து வருடக் காலம் முழுமையாகப் பணியாற்றி, அவரின் ஆட்சியில் மூன்று மாவட்டத்தின் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்துள்ளேன். அவருடைய ஆட்சி ஐந்து வருடங்கள் முழுமையாக இருந்து, தேர்தல் ஆணையம் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, வழக்கமாக நடக்கக் கூடிய தேர்தல் மூலமாக, அடுத்த தேர்தல் நடந்து முதலமைச்சராக வந்த குமாரசாமி அவர்களுடைய அன்பைப் பெற்று, அவரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கும்போது, விடமாட்டேன் என்ற அவரிடம் 24 மணி நேரமும் அடம் பிடித்து, அவரை வற்புறுத்தி ராஜினாமா வாங்கிட்டு வந்தேன்.

இப்போது நமது நண்பர், புதுசு புதுசா தினமும் கதை சொல்றாங்க. அதனால் எத்தனை கதை சொன்னாலும் கூட சரி, உங்களை நாங்கள் கேள்வி கேட்பதை விட போவது கிடையாது. எந்தவொரு தயவு தாட்சணையும் இல்லாமல், நீங்கள் செய்கின்ற தவற்றைத் தொடர்ந்து, மக்கள் மன்றத்திலே வைத்துக் கொண்டிருப்போம். பிஜிஆரோ, துபாய் பயணமோ எதுவாக இருந்தாலும் எங்களின் கேள்விக்கணைகள் தொடரும். எவ்வளோ பொய் சொல்ல முடியுமோ, சொல்லிட்டே இருங்கள். அதற்கான பதில் காலம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

நிரந்தரமான தலைவர்கள் கட்சியில் இருந்தால் ஜனநாயகம் வளராது என்று நினைக்கும் கட்சி பாஜக. ஆனால், திமுகவில்தான் நிரந்தர தலைவர்களை வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் அற்புதமே ஒரு சாமானிய மனிதரைக் கூடப் பிடித்துக் கட்சியின் தலைவராக்கி, பாரத பிரதமர் அளவுக்கு உயர்த்தக் கூடிய சக்தி எங்கள் கட்சியில் மட்டும்தான் இருக்கு. அது வந்து குறிப்பாக, அறிவாலயம் வாசலில் பெட்சீட், தலையணை போட்டு தினமும் தூங்குறவங்களுக்கு தெரியாது. காலம் காலமாக கொத்தடிமைகள் போன்று ஒரு குடும்பத்திற்கு சேவை செய்பவர்களுக்கு தெரியாது. நான் என்ன பேசுகிறேன் என்பது பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தெரியும். அடுத்த பிரதமராக வேண்டுமென்றால், அடுத்த தமிழக முதல்வராக வேண்டுமென்றால், ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னாரோ அதை ஏற்றுக்கொண்டு பாஜக பக்கம் வந்திருங்கள் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று கூறினார்.

ஆறுமணி நேரம் கெடு குறித்து பேசிய அவர், “நேற்று ஏழு மணி நேரம்வரை காத்திருந்தேன். ஒருவேளை போலீஸ் டிராபிக்கில் சிக்கியிருப்பார்கள் என்பதால் காத்திருந்தேன். ஆறு மணி நேரத்தில் போகக் கூடாது என்று முடிவெடுத்து ஏழு மணி நேரம் கழித்தும் கூட அவர்கள் வரவில்லை. ஏனென்றால் வர முடியாது. ஒரு மனிதன் தவறு செய்தான், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கான முகாந்திரம் இருக்க வேண்டும் ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரத்தைத் தாண்டி மனச்சாட்சி இருக்க வேண்டும். என் வாழ்க்கையை புரட்டிப்போட்டு தேடினால் கூட ஒரு கடுகளவு தவறு இருக்காது. என்னுடைய வாழ்க்கை அப்படிப்பட்டது. உங்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. இது ஓபன் சவால். இந்த தைரியம் பாஜகவில் இருந்தால் மட்டுமே வரும். தவறு செய்யவில்லை என்ற தைரியத்தில் பேசுகிறோம்.

தொடர்ந்து அண்ணன் ஆர்.எஸ்.பாரதி பேசிக் கொண்டே இருக்கலாம். ஆனால், எங்களுடைய அடுத்த கேள்விகள், வலிமையாக இருக்கும்; கனமாக இருக்கும். எத்தனை அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறையிலும், 2ஜி வழக்கிலும் வழக்குகள் உள்ளது என்பதை நீங்களே கேளுங்கள். தேவைப்படும் போது ஒரு அண்ணாமலையை கைது செய்யலாம், தேவைப்படும் போது பாதி திமுக ஜெயிலில் இருக்கும். இதை ஆர்.எஸ். பாரதி புரிந்துகொள்ள வேண்டும். இது அரசியல் காழ்புணர்ச்சி கிடையாது. உரசிப் பார்க்கலாம் என முடிவு எடுத்தால் நானும் உரசிப் பார்க்க ரெடி” என்று கூறினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 31 மா 2022