மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

முதல்வருக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து பெண் காயம்!

முதல்வருக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து பெண் காயம்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வைத்திருந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி கண்டறியும் மருத்துவப் பரிசோதனை திட்டத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக ஓமாந்தூரார் மருத்துவமனை வாயிலில் மருத்துவமனை சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்து. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, திடீரென சரிந்து விழுந்ததில் அந்தப் பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் தனது கணவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைக்குச் சென்றபோது பேனர் மேலே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், பேனர் கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை. இதனால் பலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

-வினிதா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வியாழன் 31 மா 2022