மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

ஓபிஎஸ் ஈபிஎஸ் மீதான வழக்கு ரத்து!

ஓபிஎஸ் ஈபிஎஸ் மீதான வழக்கு ரத்து!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 31) ரத்து செய்தது.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. இவரைக் கடந்த ஜூன் 14ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் அறிவித்தனர்.

இந்நிலையில், இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகழேந்தி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணையிலிருந்து வந்தது.

இவ்வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் , ‘தவறு செய்த உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படும் போது அதனைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்படும். கட்சி விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது கட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கத் தலைமைக்கு அதிகாரம் உள்ளது. தலைமையின் முடிவுக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதேசமயத்தில் போதிய காரணங்கள் இல்லாமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகப் புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஓபிஎஸ் ஈபிஎஸ் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

வியாழன் 31 மா 2022