மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

டெல்லியில் இன்று ஸ்டாலின் சந்திப்பது யார் யாரை?

டெல்லியில்  இன்று ஸ்டாலின் சந்திப்பது யார் யாரை?

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று மார்ச் 30 மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு டெல்லி செல்லும் ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்திக்கிறார். இதை நேற்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று டெல்லி சென்று சேர்ந்த முதல்வர் மு. க. ஸ்டாலின், இன்று மார்ச் 31 பகல் ஒரு மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.

.அதையடுத்து பிற்பகல் 2.30 க்கு ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் தமிழகம் மெதுவாக செயல்படுகிறது என அண்மையில் பொது நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதும் அதற்கு முதல்வர் பதில் கொடுப்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

அவரது சந்திப்பை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.30க்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார் முதல்வர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று மாலை 4.30 க்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

அரசு ரீதியான இந்த சந்திப்புகளை தாண்டி அரசியல் ரீதியான சந்திப்புகளையும் டெல்லியில் மேற்கொள்ள இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வியாழன் 31 மா 2022