மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

சிவசங்கர்... கண்ணப்பன்: இரு தரப்பிலும் நடப்பது என்ன?

சிவசங்கர்... கண்ணப்பன்: இரு தரப்பிலும் நடப்பது என்ன?

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நேற்று மார்ச் 29ஆம் தேதி செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில்... பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே நேரம் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

இந்த மாற்றம் அமைச்சர் சிவசங்கருக்கு பிரமோஷன் ஆக கருதப்படும் நிலையில், அமைச்சர் கண்ணப்பனுக்கு டி பிரமோஷன் ஆக அதாவது பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் அமைச்சர் சிவசங்கர் தரப்பினர் உற்சாகமாக இருக்க, அமைச்சர் கண்ணப்பன் தரப்பினரோ மூட் அவுட் ஆகி விட்டனர்.

நேற்று மாலை அமைச்சர்கள் இலாகா மாற்றம் அறிவிப்பு வந்ததில் இருந்தே அமைச்சர் சிவசங்கரின் செல்போனுக்கு வாழ்த்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால், அவரது செல்போன் பிசி மோடுக்கு மாறியிருந்தது.

அதேநேரம் அமைச்சர் கண்ணப்பன், அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து விட்டனர்

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்.

ஆனால் ராஜகண்ணப்பன் சென்னையில் வீட்டில் இருந்தபடியே தனக்கு நெருக்கமானவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் மீது கோபப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

"கண்ணப்பன் அதிமுகவில் இருந்து திமுக, திமுகவிலிருந்து அதிமுக என்று மாறி மாறி பயணம் செய்தவர். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். 2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை அல்லது மதுரை

தொகுதியை பன்னீர் செல்வத்திடம் கேட்டார் கண்ணப்பன். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தேர்தல் காலத்தின் போதே அதிமுக கரை வேட்டி கட்டாமல், திமுக கரை வேட்டியும் கட்டாமல் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார். பொதுத்தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்ற நிலையில், 2020 பிப்ரவரி மாதம் திமுகவில் சேர்ந்தார்.

அப்போதே நுழைவுக் கட்டணமாக

கட்சி வளர்ச்சி நிதியைக் கொடுத்து தான் சேர்ந்தார். அதோடு 2021 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு, ஆட்சி அமைத்தால் போக்குவரத்து அல்லது பொதுப் பணித் துறை அமைச்சர் என்று தெளிவான நிபந்தனைகளோடு தான் திமுகவில் சேர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது இலாகா மாற்றப்பட்ட நிலையில் கடுமையான அப்செட்டில் இருக்கிறார். நான் மட்டுமா சம்பாதிக்கிறேன்? செந்தில் பாலாஜி போன்ற மற்ற மந்திரிகள் சம்பாதிக்கவில்லையா? முதுகுளத்தூர் விவகாரத்தில் அந்த பிடிஒ அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதற்காக அவரை கண்டித்தேன். இதுபற்றி உண்மை நிலையை விசாரித்து முதல்வர் அறிய வேண்டாமா? ' என்றெல்லாம் கண்ணப்பன் நேற்றும் இன்றும் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் குமுறி வருகிறார். பொதுவாகவே அவர் ஒரு முடிவெடுக்கும்போது யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென முடிவெடுத்து விடுவார். ஆனால் இப்போது திமுகவின் பதவி காலம் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அந்த மாதிரி முடிவு எடுக்க மாட்டார் என்று நினைக்கிறோம்" என்கிறார்கள்.

அதேநேரம் தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, "முதல்வர் ஸ்டாலின், முதுகுளத்தூர் விவகாரத்துக்கு முன்பே பல வகைகளில் கண்ணப்பன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்" என்கிறார்கள்.

வேந்தன்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

புதன் 30 மா 2022