மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சமூட்டுகிறது: ராமதாஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சமூட்டுகிறது: ராமதாஸ்

ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்ததையடுத்து, 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94க்கு, டீசல் ரூ.96.00க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69க்கும், டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை 76 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அவற்றின் இரு சக்கர ஊர்திகளின் எரிபொருளுக்காக மட்டும் மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.69, டீசல் விலை ரூ.96.76 என்பது நினைத்துப் பார்க்க முடியாத விலை ஆகும்.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இனியும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதை தவிர்க்க உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரொல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் மூன்று கட்ட போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 30 மா 2022