மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

பால் விலை உயருமா?: அமைச்சர் நாசர் விளக்கம்!

பால் விலை உயருமா?: அமைச்சர் நாசர் விளக்கம்!

தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் விளக்கமளித்துள்ளார்.

திருவள்ளூர் பகுதியில் வருகின்ற ஏப்ரல் 1 முதல் 11ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்கான கண்காட்சி அரங்க ஏற்பாடுகளை பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பால் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தூங்கிக் கொண்டே இருக்கிறார். அவர்கள் ஆட்சிக் காலத்தில் லிட்டர் 6 ரூபாய் வரை பால் விலை உயர்த்தப்பட்டது. தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி பால் விலையை 3 ரூபாய் குறைத்தார். இதனால் அரசுக்கு மாதம் 220 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இருப்பினும் பால் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லை” என்று கூறினார்.

முன்னதாக கடந்த வாரத்தில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறுகின்றபோது மக்கள் அதை சந்திக்க வேண்டியிருக்கும். விலை உயர்வு என்பது வேண்டுமென்றே திணிப்பதில்லை. தனியார் கொள்முதல் செய்யும்போது கட்டுப்படியாகவில்லை, விலையேற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிகாரிகள் சம்பளம் அதிகமாக வேண்டுமென்று கேட்கிறார்கள். எவ்வளவு தான் அரசு மானியம் கொடுத்தாலும் சிறு அளவாவது மாறுதல் வரும். அது முதல்வர் முடிவெடுக்க வேண்டியது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 30 மா 2022