மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 மா 2022

விருதுநகர் பாலியல் வழக்கு: நான்கு பேரை காவலில் விசாரிக்க அனுமதி!

விருதுநகர் பாலியல் வழக்கு: நான்கு பேரை காவலில் விசாரிக்க அனுமதி!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த, தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமத், பிரவீன், மாடசாமி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் நால்வரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய் ஆகியோர் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் கவுன்சலிங் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கிட்டதட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 27ஆம் தேதியும் அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது செல்போன் பதிவுகள், அதில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதுபோன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரின் வீட்டிலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நான்கு பேரும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரையும் ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களை மீண்டும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 29 மா 2022