மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 மா 2022

ஸ்டாலினை தொடர்ந்து துரைமுருகன் துபாய் பயணம்!

ஸ்டாலினை தொடர்ந்து துரைமுருகன் துபாய் பயணம்!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது நான்கு நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மார்ச் 29 அதிகாலை சென்னை திரும்பினார்.

முதல்வரை விமான நிலையத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று மார்ச் 29 துபாய்க்கு புறப்படுகிறார்.

இதுபற்றி துரைமுருகனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது,

"அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் வேலூர் வட்டாரத்திலுள்ள இஸ்லாமிய தொழிலதிபர்கள் மூலமாக ஆரம்ப காலத்தில் துபாய் உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் தொழில்களில் பங்குதாரர்களாக ஈடுபட்டனர். பிறகு தாங்களாகவே தொழில் செய்து வந்தனர்.

இடையில் சிலர் துபாயில் தன்னை ஏமாற்றி விட்டதாக துரைமுருகன் தனது நண்பர்களிடம் தெரிவித்தது கூட உண்டு.

இந்நிலையில்தான் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில்.... இன்று துரை முருகன் துபாய் பயணம் மேற்கொள்கிறார் முற்பகல் துபாய் புறப்படும் துரைமுருகன் அங்கே சில நாட்கள் இருந்து விட்டு ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்காக ஏப்ரல் 1ஆம் தேதி துபாயில் இருந்து நேரடியாக டெல்லிக்கு வந்து விடுவார்" என்கிறார்கள்.

திமுக தலைவரான முதல்வரின் துபாய் பயணத்தை அடுத்து திமுக பொதுச்செயலாளரின் துபாய் பயணம் அரசியல் அரங்கிலும் பேசுபொருளாகி இருக்கிறது.

வேந்தன்

.

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

4 நிமிட வாசிப்பு

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

6 நிமிட வாசிப்பு

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

செவ்வாய் 29 மா 2022