மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 மா 2022

தமிழகத்தின் நன்மைக்காக ஸ்டாலின் போகவில்லை: ஈபிஎஸ்

தமிழகத்தின் நன்மைக்காக ஸ்டாலின் போகவில்லை: ஈபிஎஸ்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். தனது மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள் என குடும்பத்தோடு சென்றுள்ளார். முதல்வர் குடும்பத்தோடு சென்ற நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

"துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் தறுவாயில் தமிழகத்தின் சார்பாக அரங்கம் அமைத்து முதல்வர் தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது" என்று விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது அவரது குடும்பத்துக்காக புதிய தொழில் தொடங்கவா என மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அவர் மட்டும் சென்றிருந்தால் பரவாயில்லை. அந்த துறையைச் சேர்ந்த செயலாளர் சென்றிருந்தால் பரவில்லை. ஆனால் குடும்பமே சென்றிருக்கிறது.

தமிழக மக்களுக்காக நன்மை செய்யவோ, தொழில் துவங்கவோ அங்கே செல்லவில்லை, தனிப்பட்ட காரணத்துக்காகச் சென்றுள்ளார் என்று மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது.

சர்வதேச வர்த்தக கண்காட்சி 1.10.2021 அன்று தொடங்கப்பட்டு 31.3.2022 அன்று முடிகிறது. இன்னும் 4 நாட்களில் கண்காட்சி முடியவுள்ள தறுவாயில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாகச் சர்வதேச வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 1.10.2021 அன்றே சென்று துவக்கி வைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு குடும்பமாகத் துபாய் சென்றுள்ளார்” என்றார்.

நான் வெளிநாடு சென்ற போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் என்னை விமர்சித்திருந்தார். அதை இங்கே போட்டுகாட்ட விரும்புகிறேன் என அந்த வீடியோவை ப்ளே செய்தார் எடப்பாடி பழனிசாமி.

‘முதலீட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போகிறோம் என்று அறிவித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறார். நியாயமாக ஒரு முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தனியாகச் சென்றிருந்தால் உள்ளபடியே எதிர்பார்ப்போடு, நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால் ஒரு அமைச்சரவையே சென்றிருக்கிறது. அதனால் தான் சொன்னேன். அதிமுகவின் சுற்றுலா அமைச்சரவை’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த வீடியோவை போட்டுக் காண்பித்துப் பேசினார் ஈபிஎஸ்.

“நான் வெளிநாடு சென்றபோது, அனைவரும் பயணிக்கும் விமானத்தில்தான் பயணித்தேன். என்னுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், துறை சார்ந்த செயலாளர்களும் வந்திருந்தனர். அப்போது என்னுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை லண்டனுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு நம்முடைய ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவது தொடர்பாகவும், அதிநவீன மருத்துவ கருவிகளை வாங்குவது தொடர்பாகவும், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனை போல தமிழகத்திலும் அமைக்கவும் ஆலோசித்தோம். அவரைத் தவிர வேறு எந்த மந்திரியும் லண்டனுக்கு வரவில்லை. அப்போது ஸ்டாலின் பொய்ச் செய்தியைத் தான் தெரிவித்தார்” என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 27 மா 2022