மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 மா 2022

சென்னை சுற்றுச்சூழல் ஆய்வாளருக்கு மோடி பாராட்டு!

சென்னை சுற்றுச்சூழல் ஆய்வாளருக்கு மோடி பாராட்டு!

ஏரி, குளங்களைத் தூய்மைப்படுத்தும் சேவையில் ஈடுபட்டு வரும் சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்குப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாதம் தோறும் இறுதி ஞாயிறு அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நாட்டில் சமூக சேவையில் ஈடுபடுவர்களை குறிப்பிட்டுப் பாராட்டுவார்.

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில், வேலை செய்து வந்த அருண் கிருஷ்ணமூர்த்தி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இதன்மூலம், நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 150க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை இவரது அமைப்பு தூய்மைப்படுத்தியுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, ஹைதராபாத், பெங்களூரு, போன்ற பல நகரங்களிலும் நீர்நிலைகளை புதுப்பிக்க இவரது அமைப்பு முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் அருண் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டியுள்ள பிரதமர் மோடி. “நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நீர் சேமிப்பு; நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது சமூகத்தின் இயல்பின் ஒரு பகுதியாகும். அருண் கிருஷ்ணமூர்த்தி போல நாட்டில் பலர் நீர் சேமிப்பை வாழ்க்கைப் பணியாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அருண் தனது பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளைச் சுத்தம் செய்யும் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார். இதுவரை 150க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளைச் சுத்தப்படுத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்” எனக் கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

ஞாயிறு 27 மா 2022