மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

வெள்ளலூர் பேரூராட்சியை கைப்பற்றிய அதிமுக!

வெள்ளலூர் பேரூராட்சியை கைப்பற்றிய அதிமுக!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 32 பேரூராட்சிகளுக்கு கடந்த 4ஆம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த வெள்ளலூர் பேரூராட்சிக்கு இன்று(மார்ச் 26) காலை மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, பேரூராட்சி அலுவலகத்திற்குள் திமுகவினர் தடையை மீறி உள்ளே நுழைய முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4-வது வார்டு திமுக கவுன்சிலர் குணசுந்தரி என்பவரின் கணவரை, அதிமுகவினர் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து திமுகவினர் அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தினர். இதனால் போலீஸார் தடியடி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, திமுக கவுன்சிலர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. பேரூராட்சி தலைவராக இரண்டாவது முறையாக அதிமுகவைச் சேர்ந்த மருதாசலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோன்று துணை தலைவராக கணேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை தேர்தல் அலுவலர்கள் அவர்களிடம் வழங்கினார். இதையடுத்து பேரூராட்சி தலைவர், துணைதலைவர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

காலை முதலே பதற்ற சூழ்நிலையில் இருந்து வந்த வெள்ளலூர் பேரூராட்சி, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

-வினிதா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

சனி 26 மா 2022