மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

முதல்வருடன் துபாய் சென்றவர்கள் யார் யார்?

முதல்வருடன் துபாய் சென்றவர்கள் யார் யார்?

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தில் இரண்டாவது நாளான இன்று மார்ச் 25ஆம் தேதி, துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கிறார்.

மை 3 ஏ வி எஸ் பி லிமிடெட் தனி விமானத்தில் மார்ச் 24ஆம் தேதி மாலை 4.16 க்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

விமானத்தில் அவரோடு துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, நலானி , இன்பா உதயநிதி, தமையா, காந்தி ராஜ், பிஎஸ்ஒ செல்வராஜ், லிட்டில் ஜார்ஜ், அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்டாலினின் அரசியல் உதவியாளர் தினேஷ், தனி செயலாளர் உதய சந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் பறந்தனர்.

நேற்று முன்தினம் மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கம் தொகுதி எம். எல். ஏ.வும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் துபாய் புறப்பட்டார்.

22ஆம் தேதி அதிகாலையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் துபாய் புறப்பட்டார். அதே நாளில் முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன், அண்ணா நகர் மோகன் மகன் கார்த்திக் உட்பட சிலரும் துபாய் சென்று வரவேற்பு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் துபாயில் முதல்வரின் பயணத் தடம், தங்கும் இடம், மீட்டிங் இடம், துபாய் எக்ஸ் போ உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.

-வணங்காமுடி

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 25 மா 2022