மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

திமுக பிரமுகரை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

திமுக பிரமுகரை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

கடந்த ஜனவரி மாதம் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். பார் டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவர்கள் புகார் கூறினார்கள். அந்தப் புகார்களை செந்தில் பாலாஜி மறுத்தார்.

தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் திமுக மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களும் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுமையான அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மார்ச் 25ஆம் தேதி திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் திரண்டனர்.

"திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் டாஸ்மாக் கடையில் அன்றாட விற்பனையில் ஒரு சதவீத கமிஷன் கேட்டு ஊழியர்களை மிரட்டி வருகிறார்கள். இதனை கண்டித்து நாங்கள் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம்" என்கிறார்கள் அந்த ஊழியர்கள்.

திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லெனினிடம் இதுகுறித்துப் பேசினோம்.

"திருவாரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 108 கடைகள் இருக்கு. புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.டி. அரசகுமார் உடைய தம்பி பி.டி. ரவி மற்றும் சுதந்திர மாறன் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைத் தொகையில் ஒரு பர்சன்ட் கமிஷன் வேணும் அப்படின்னு சொல்லி நேத்து எல்லா கடையிலயும் போய் மிரட்டி இருக்காங்க.

நாங்களே பல்வேறு மன உளைச்சலுக்கு இடையில வேலை பார்த்துகிட்டு இருக்கோம். அதனால குடுக்க முடியாதுன்னு சொல்லி தன்னிச்சையாய் இன்னிக்கு திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்னாடி ஆர்ப்பாட்டத்திற்கு வந்துட்டாங்க.

மாவட்ட மேலாளர் எங்களை அழைச்சு பேசினாங்க. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்வது, இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராம பாத்துக்கணும் என முடிவெடுத்ததன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது"என்று கூறினார் லெனின்.

திருவாரூர் மாவட்ட கடைகளில் ஏன் புதுக்கோட்டையில் இருந்து வந்து வசூல் செய்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்க...

"கிட்டத்தட்ட இங்கே நாலைந்து மாவட்டங்களில் அரசகுமார் குரூப் மட்டுமே ஒன் மேன் ஆர்மி போல பார் எடுத்திருக்கிறது. பார்களில் இழப்பு ஏற்படுகிறது என்பதற்காக.... கிட்டத்தட்ட டாஸ்மாக்கின் 19 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு அரசுக்குப் போக வேண்டிய தொகையில் இவர்கள் கமிஷன் கேட்கிறார்கள்" என்ற லெனின் மேலும்...

"எங்கள் பிரச்சினைகளை பற்றி துறை அமைச்சரிடமும் மேலாண்மை இயக்குனரிடமும் எங்கள் மாநில சம்மேளனம் மூலமாக பல முறை சொல்லிவிட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இன்று போராட்டம் நடத்தி உள்ளோம்.

டாஸ்மாக் மேலாளரிடம் கூட இன்று நாங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக எச்சரித்தோம். அவர் போலீசில் புகார் அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்ததன் பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்" என்றார் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் லெனின்.

வேந்தன்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 25 மா 2022