மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

நீட் மசோதா உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்ததா?

நீட் மசோதா உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்ததா?

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா இன்னும் மத்திய உள்துறைக்கு வரவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தும் வலியுறுத்தினார்.

கடந்த மார்ச் 15ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், 'நீட் மசோதா நிலை குறித்து ஆளுநரிடம் விசாரித்தோம். அப்போது ஆளுநர் எனக்கும் சட்டம் தெரியும். இரண்டாவது முறையாக நீட் மசோதாவைத் திருப்பி அனுப்ப முடியாது. அதனால் ஜனாதிபதிக்குத் தான் அனுப்பி வைக்க வேண்டும். அவருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார். இதன்மூலம் விரைவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம்” என்று முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் இன்று திமுக எம்.பி. ஆ. ராசா நீட் விலக்கு மசோதா குறித்து எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான தமிழ்நாடு சேர்க்கை மசோதா 2021, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய உள்துறைக்கு கிடைக்கப் பெற்றதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது. அந்தவகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்குக் கொடுக்கப்பட்ட தகவலின்படி, நீட் விலக்கு அளிக்கக் கோரிய மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைக்கப் பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வெள்ளி 25 மா 2022