மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

மீண்டும் சட்டப்பேரவை எப்போது?

மீண்டும் சட்டப்பேரவை எப்போது?

மீண்டும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கடந்த 18ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை நேற்று முடிந்தது. மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும் போது நிதியமைச்சர் வெளியே சென்றது, அதற்காக அதிமுக வெளிநடப்பு செய்தது என பரபரப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மானிய கோரிக்கை நடைபெறும். எந்தெந்த மானிய கோரிக்கைகள், எந்தெந்த நாட்களில் எடுத்து விவாதிக்கலாம் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். வரும் மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசிக்கொண்டிருக்கும் போது நிதியமைச்சர் வெளியே சென்றது குறித்துப் பேசிய அவர், “சில முக்கிய பணியின் காரணமாகத்தான் நிதியமைச்சர் வெளியே சென்றார். இது எனது கவனத்துக்கும் தெரியவந்தது. அமைச்சரவை என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. முதலமைச்சரே அவையில் இருக்கும் போது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. இதுபோன்ற காரணத்தைச் சொல்லி, வெளிநடப்பு செய்திருக்கத் தேவையில்லை” என்றார்.

ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்துக்குச் சட்டப்பேரவை மாற்றப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு, ”எதைச் செய்தாலும், தீர ஆராய்ந்து, கலந்து ஆலோசித்துச் சரியான முடிவை எடுக்கக் கூடியவர் முதல்வர்” என்றார். அதுபோன்று முதல்வர் சட்டப்பேரவையில் தன்னை புகழ்வதையும் அனுமதிக்கமாட்டார். எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சிப்பதையும் அனுமதித்து கைதட்டிக்கொண்டு இருக்கமாட்டார்” என்றார்.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வெள்ளி 25 மா 2022