மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

வேலை நிறுத்தம்: போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

வேலை நிறுத்தம்: போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

வருகிற மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

அதுபோன்று பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, நாட்டுக்கு விரோதமான கொள்கைகளைக் கண்டித்து வரும் 28 ,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொமுச உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள், முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

இதையடுத்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுகவின் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும். இதனைத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சூழலில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்வதோடு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்குப் பாதகம் ஏற்படுத்தக்கூடிய செயல் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் மக்களுக்கு வேலை நிறுத்தம் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். எனவே மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் எந்தவிதமான விடுப்பும் வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பணிக்கு வரவில்லை என்றால் ஆப்செண்ட் போட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பணிக்கு வராத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 25 மா 2022