மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு!

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து தினசரி காலையில் எழும்போது, இன்று பெட்ரோல், டீசல் உயர்ந்துவிடுமோ என்ற கவலை வாகன ஓட்டிகளிடையே ஒட்டிக்கொள்கிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை தலா 76 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 22, 23 ஆகிய இருநாட்களும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. உயர்த்தப்பட்ட விலையின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 91 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 95 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு கொரோனா பரவலும், அதனைத்தொடர்ந்து இரு நாட்டுக்கு இடையே நடைபெறும் போர்தான் காரணம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். சர்வதேச அளவில் எரிபொருளின் விலை 37 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் 5 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று 137 நாட்களுக்குப் பிறகு மூன்றாவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனையாகிறது.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 25 மா 2022